எளிய வாழ்க்கைக்கு
அல்லும் ,பகலும் அயராது உழைத்து
ஆயிரம் ,கோடி என்று அளவுக்கதிகமாக
எவ்வளவு சம்பாதித்து சேர்த்தாலும்
எவரால் கூறமுடியும்
எமன் கொண்டு போகும் வரை
போதுமென்று ?
கடுமையாய் உழைத்து சேர்த்து
கட்டிக் காத்த பணம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
களவாடி, காணாமல் போகும்போது
காலமெல்லாம் கண் கலங்க வைத்து
கையேந்த வைத்துவிடும்
எளிமையான வாழ்க்கையில்
என்றும் வாழ விரும்புங்கள்
பெற்றெடுத்த பிள்ளைகளிடமும்
போதுமென்ற எண்ணத்தை
எடுத்து சொல்லி வழி காட்டுங்கள்
எளிய வாழ்க்கைக்கு வித்திடுங்கள்