காதல் அருவி
அதிகாலை நேரம்
அருவியின் ஓரம்
இயற்கையின் அழகை
பருகியபடி நான்!
பொன்னொளி தீண்டி
வெண்பட்டு திரைவிலக
கண்பரிக்கும் நீரோடை
சலசலத்து நல்லிசைமீட்ட
கார்வண்ண குயில்பாட
கோலவண்ண மயிலாட
குளிர்தென்றல் கரம்நீட்ட
நறுமலர்கூட்டம் சேர்ந்தாட
கள்ளுண்டதேனீ புதுமலரோ?
என்றெண்ணி ரீங்காரமிட
கண்ணாடிஊற்றுக்கள் பனித்தூவ
கனிதரும்மரங்கள் வரவேற்க
மகிழ்ச்சித் திரளொன்று மனதோடு
உடைபட அனிச்சையாய் திரும்பினேன்...
அடிமேல் அடிவைத்து புதிதாய்
நடைபயிலும் அன்னமென
பேரழகின் சொந்தமென
அசைந்து அருகில் வந்தாள்...
கண்டதும் இதயத்தில்
காதல் அருவி!