நிலவும் அவளும்
மங்கியதோர் மாலை நேரம்
தடாகக் கரையில் அவள்
எனக்காக காத்திருந்தாள் அவள்
பாலன்ன வண்ண முகம் கண்டு
நிலவென்று எண்ணியதோ அல்லிமொட்டுக்கள்
அக்கணமே அழகாய் அலர்ந்து
இந்நிலையில் நீல வானில் பால்நிலவு
மெல்ல உலாவிவந்து தடாகம் மேல்
கொஞ்சம் நின்றது அங்கு பார்த்தது
தன் ஸ்பரிசம் படாமலே பூத்து குலுங்கும்'
அல்லிப் பூக்கள் .....நிலவுக்கு புரிந்தது
நிலவென ஒளிரும் காரிகை ஆங்கு
கரையில் ....அவள் முகம்தான் நிலவென்று
எண்ணியது போலும் அல்லி.....