காதல் குறைவதில்லை
விழியோரச் சிறுபார்வை
விளையாடும்
என்நெஞ்சில்
வழியோரம் அலைமோதும்
விழியிரண்டும்
எனைக்கெஞ்சும் !
தொலைவான மேகத்துள்
தோன்றும்
ஒளி மின்னலென
குறைவான நொடிப்போதில் மறைவாகும்
நின் மின்னலிடை !
குளிர்பானப் புட்டியிலே
குழலிரண்டு சேர்ந்துறிஞ்ச குறையாத பானமென நிறைந்திருக்கும்
நமதுஅன்பு !
-யாதுமறியான்.