என்ன உலகமடா இது ....

விதவிதமாய் பட்டாடை படையல் சோறு

குடம் குடமாய் பால் அபிஷேகம் பன்னீரோடு

பழவகைகள் பரிவாரங்கள் பலவிதமாய்

காணாத கடவுளுக்காக இத்தனயும் இங்கே

உணவுக்காக நித்தம் நித்தம் கலங்கிநிற்கும்

உயிருள்ள மனிதனுக்கு ஒருவேளை

உணவளிக்கும் உணர்வு இங்கு எங்கே ......






எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா... (3-Oct-11, 3:38 pm)
பார்வை : 427

மேலே