வருத்தமும் இல்லை சந்தோஷமும் இல்லை 555
***வருத்தமும் இல்லை சந்தோஷமும் இல்லை 555 ***
மாதவிடாய்...
ஆண் பெண் பேதமின்றி
துள்ளி விளையாண்ட நான்...
பூப்பெய்த நாள் முதல் என்னை
பெண்ணாக உணர சொன்னார்கள்...
முன்கூட்டியே வருவதால்
வருத்தமும் இல்லை...
சில நாட்கள் தள்ளிப்போவதால்
சந்தோஷமும் இல்லை...
இன்னொருவனுக்கு
மனைவியாக சென்றேன்...
முன்கூட்டியே வந்தால்
அழுது புலம்புகிறேன்...
சிலநாட்கள்
தள்ளி கண்டால்...
எனக்குள் ஏற்படும் வலியை
எப்படி சொல்வேன்...
வசிக்கும் தெருவில் எத்தனை
ஏளன பேச்சுக்கள்...
வீட்டுக்குள் எத்தனை
வார்த்தை எரிகற்கள்...
மணந்தவனே
எரிக்கல்லாய் விழும்போது...
உள்ளத்தின் காயத்தினை
ஆற்றிட யாரோ...
மாதந்தோறும் சில நாட்கள்
நான் தனித்திருக்க வேண்டுமாம்...
பெற்றவளும் சொல்கிறாள்
தொடாதே தீட்டு என்று...
பலமாத
தீட்டை சேகரித்து...
நான் ஏக்கத்தோடு
பெற்றெடுக்கும் குழந்தையை....
சில நாட்களில் நெஞ்சோடு
அனைத்து கொள்ளும் போது...
அவர்களுக்கு
இல்லையாம் தீட்டு...
ஆண்டுகள் சில கடந்து
குருதி காணவில்லை என்றால்...
என் இன்னொரு மழலை
கர்ப்பபையை...
வெட்டி எடுக்கிறேன்
நான் உயிர்வாழ...
சில ஆண்டுகளில் நானும்
மண்ணில் சாய...
என் கொடுமைகள்
இன்னும் பல.....
***முதல்பூ .பெ .மணி.....***