காதல் வலி77

பூவுலகின் பேரழகி..3

தன்னை அழகுபடுத்திக் கொள்ள விரும்பும் பெண்கள் அழகு நிலையம் செல்வார்கள்
ஆனால் நீயோ அந்த அழகு
நிலையத்தையே அழகாக்குபவள்

உன் சிவப்பழகிற்குக் காரணம்
உன் உடலில் மட்டும் குருதி ஓடாமல் குறுந் தீ ஓடுகிறது

வள்ளுவர் மட்டும்
உன் குரலைக் கேட்டு இருந்தால்
திருக்குறளை எழுதாது
உன் குரலை எழுதியிருப்பார்

உனக்கு சுயம்வரம் என்றால்
வில்லை மட்டும் அல்ல
கல்லைக் கூட
நான் வளைத்துக்
காட்டுவேன்

அன்னை கொடுத்தது
ஒரு பிறவி
எனக்கு
உன்னால் கிடைத்தது
மறுபிறவி

அனைவரும்
வான்மழையில் நனைய
நீ மட்டும் தேன் மழையில்
நனைபவள்

அன்பே இனி நீ
கோயிலுக்குச் செல்லாதே
குத்து விளக்கு என்று
உன்னைக் கொளுத்தி
விடப்போகிறார்கள்

மயிலுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா
மயில் இந்தியாவின் தேசியச்சின்னம்
நீயோ இந்த பிரபஞ்சத்தின் தேசியச் சின்னம்

எல்லோரும் மழலையாக பிறந்து பெண்ணாக அவர்கள் நீ மட்டும் மயிலாக பிறந்து என்னானாய் பெண்ணாக மாறினாய்

எழுதியவர் : Kumar (2-Mar-22, 10:47 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 113

மேலே