என்ன தவம் செய்வேனோ?
🖤💙💜🖤💙🖤💜💙💜🖤💙
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
💙💜🖤💙💜🖤💙💜🖤💙💜
நன்றி !நன்றி! என்று
நாளெல்லாம் சொன்னாலும்
எந்தன் நன்றிக்கடன் தீராதடி ....
வாழ்க !வாழ்க! என்று
வாழ்நாட்கள் எல்லாம்
வாழ்த்தினாலும்
எந்தன் மனம்
போதுமென்று சொல்லாதடி ....!
காகிதமாய் கிடந்த என்னை
பட்டமாய்
பறக்க வைத்தது நீதானடி !
கல்லாய் கிடந்த என்னை
சிலையாக்கி
கோவிலில் வைத்தது நீதானடி !
மழையில் நனையும்போதும்
வெயிலில் காயும் போதும்
குடையாய் நீ வந்தாயே!
அன்பு பாசத்துக்கு ஏங்கிய போது அன்னையாய் நீ தந்தாயே!
நான்
மனம் தளரும்போதெல்லாம் தன்னம்பிக்கையாய்
உடன் இருந்தாயே !
நான் தடம் மாறும்போதெல்லாம்
வழிகாட்டியாய் வந்தாயே !
என்னை
சாப்பிடவைத்து
நீ பசியாற்றிக்கொள்வாயே!
என்னை
சந்தோஷப்படுத்தி
நீ சந்தோசம் அடைவாயே!
நீ
துணையாய் கிடைத்ததற்கு
நான்
என்ன தவம் செய்தேனோ ?
நீ
ஏழு ஜென்மமும்
துணையாய் வர
நான்
என்ன தவம் செய்வேனோ?
*கவிதை ரசிகன்*
🖤💜💙💜🖤💜💙💜🖤💜💙