கார்கில்

பிரிந்த தாயிடம் மகன் திரும்பி வரவில்லை,
தாலியின் வயதோ ஒன்றைத் தாண்டவில்லை,
கருவில் குழந்தை, அப்பனை பார்க்கவில்லை,
உலோக துண்டுக்கோ உணர்ச்சி ஏதும் இல்லை,

கசிந்த குருதியை உறிஞ்சிக் குடித்த பின்,
பூமிக்கு தாகமோ சிறிதும் அடங்கவில்லை
காக்க வந்தவனின் வேதனைக் குரல் கேட்டும்,
வீசிய தென்றலுக்கு துளியும் வெட்கமில்லை

எனக்காக சரிந்த அந்த வீரனின் புகழ்பாட,
அவன் முகமும் தெரியவில்லை பெயரும் தெரியவில்லை

எழுதியவர் : சேகர் (3-Oct-11, 5:48 pm)
பார்வை : 591

மேலே