மனிதம் சாதிக்கும்
மனிதம் சாதிக்கும்...
------------------------'''----------
வானில் பறக்கவும் கூடுமோ -பெருங்
கடலினை நீந்தவும் ஏலுமோ
ஆழ்கடல் மூழ்கவும் ஆகுமோ - என
அச்சங்கள் பற்பல சூழ்ந்ததே!
அறிவுகள் கனவுகள் கண்டதே -அருங்
கருவிகள் ஏதேதோ செய்ததே!
இயலாத யாவையும் ஒழித்ததே -மானுடம்
எல்லையிலா வெற்றி கண்டதே!
சூரியனுக்கொரு சுற்றுலாவும்- சுற்றும்
கோள்களுக் கிடையினில் கொஞ்ச நாளும்
பால்வெளி அண்டத்தைத் தாண்டி -அந்த
விண்மீன் திரளுள்ளும் வாழோமா!
எல்லைகள் தாண்டியும் சிந்திப்பொமே -வல்லக்
கருவிகள் கண்டு நாம் சாதிப்பொமே!
-யாதுமறியான்.