பப்பு பாடல்-3
ஆரிராரிராரோ ஆரிராரிரோ
ஆராரிராரோ ஆரிராரிரோ
தேனிமலை தேக்கிலையும்
தீண்டாத தென்றலிது
பங்குனியின் உற்சவமும்
பார்க்காத வெண்ணிலவு
சிந்துநதி யோரம் நின்னு
சுதி பாடும் பொன்னுமயில்
நீயும் கண்ணுறங்கும் நேரம்
ஆரிராரிராரோ ஆரிராரிரோ
ஆராரிராரோ ஆரிராரிரோ
பொன்னி மனம்
பூத்தாலே மண்மயங்க
கண்ணிமை போல்
காத்தாளே கண்ணுறங்க
சில்லென்ற காத்தும்
சில மையில் வீசும்
சேல துணி காத்து
சீமை எங்கும் வீசும்
ஆரிராரிராரோ ஆரிராரிரோ
ஆராரிராரோ ஆரிராரிரோ