நீ வெட்கப்படும் போது

💙💚💛💚💙💛💚💙💛💚💙

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💛💚💙💛💚💙💛💚💙💛💚

இனியவளே !
உன் கை பட்டு
வரும்போது
உப்பில்லாத உணவும்
சுவைக்குதடி .....!

உன் மேனித்தொட்டு
வரும் போது
வெப்பக் காற்றும்
குளிருதடி .....!

உன் இதழ்விட்டு
வரும்போது
கடும் சொற்களும்
இனிக்குதடி....!

நீ முறைத்துப்
பார்க்கும் போது கூட
ரசிக்கும்படி இருக்குதடி...;

நீ கோபித்துக் கொண்டு
நிற்கும்போது
குழந்தை குணம்
தெரியுதடி ....!

உன்னை
பார்த்துக்கொண்டிருக்கும்போது
மணியும் நிமிடமாய்
போகுதடி....!

உன் இதழ்பட்டு
வருவது எதுவாயினும்
அமுதமாய் மாறுதடி.....!

உன் கை பட்டு
வருவது எதுவானாலும்
பொக்கிஷமாய் ஆகுதடி...!

நீ
அச்சப்பட்டு
நிற்கும்போது
உலக அழகெல்லாம்
தோற்குதடி.....!

நீ
வெட்கப்பட்டு நிற்கும்போது
ஆயிரம் கவிதைகள்
தோன்றுதடி...!

*கவிதை ரசிகன்*

💙💚💛💚💙💚💛💚💙💚💛

எழுதியவர் : கவிதை ரசிகன் (11-Mar-22, 10:07 pm)
பார்வை : 86

மேலே