நான் இறந்துவிட்டால்
நான் இறந்துவிட்டால்...
யாரும் அழாதீர்கள்...
மலர்களைத் துவாதீர்கள்...
பன்னீரும் சந்தனமும்
வாசனைத் திரவங்களும்
பூசாதீர்கள்.
நானொரு வக்கிரப்பிறப்பு.
என் கல்லறைதான்
நான் தூங்கப்போகும்
பள்ளியறை.
அதனால் என்னை
அப்படியே விட்டுவிடுங்கள்.
தொந்தரவு செய்யாதீர்கள்.