Kilikalai paar

சிவப்பு இலவம் பஞ்சு
வெடிக்க
பறந்தன பச்சை கிளிகள்
ஏமாந்து
பயிரிட்டவனுக்கோ
மகிழ்ச்சி
பஞ்சு வண்ண வண்ண
ஆடை ஆனது
பெண்கள் அணிந்து
நடந்தனர்
கிளிகளை பார் என்றனர்
மனிதர்கள்
நடக்கும் கிளிகளும்
பறக்கும் கிளிகளும்
மகிழ்ந்தனர்

எழுதியவர் : Kavin (25-Mar-22, 7:22 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே