அவளின் மீது ஒரு கணக்கு

ஆல்பா வின் அதிகாரமே நீ

கணித சுழற்சியின் கவர்ச்சியே நீ

காண கிடைக்காத கோட்பாடு நீ

என் கருத்துகளில் மீண்ட  பொய் கணக்கு நீ

சேர கூடாத துன்பங்களின் முக்கோணம் நீ

ஏக்கங்களை பெருக்க துடிக்கிறாய்

நோக்கங்களை கூட்ட பார்க்கிறாய்

கடினமான சூழ்நிலைகளை கழிக்க வழி தேடுகிறாய்  ஏன்?

இவையாவும் நடக்க வேண்டும் என்று
நான் அல்ஜிபிராவிடம் ஆலோசனை கேட்கிறேன்

ஸ்கொயர் என்ற சிந்தனைக்குள் சிக்கிவிடாமல் இருக்க!!!

(=)சமத்துடன்  சமாதானம் ஆகிவிடுகின்றன

உந்தன் முக அசைவுகளை கொண்டு அறிவியலின் அளவுகள் இங்கே தான் கணிக்கப்படுகிறது

       இப்படிக்கு
                   -- பூஜ்யம் (ஓவ்வொரு முறையும் ஏக்கத்தோடு)

எழுதியவர் : கலையரசன்.ம (25-Mar-22, 11:35 pm)
சேர்த்தது : கலையரசன்
பார்வை : 104

மேலே