வாழ்க்கைனா
வாழ்க்கைன்னா
வாழ்க்கைன்னா என்னான்னு சொல்லு - அதை
வாழ்ந்திடத்தான் நீயும் துணிவாக நில்லு.
உன்னால முடியும்னு நம்பு - இந்த
உலகத்த புரட்டிட உனக்கிருக்கு தெம்பு.
உடம்ப நீ கோயிலா பண்ணி - அதை
வலுவாக வளர்த்திடு இரும்பாக எண்ணி.
அளவோட சாப்பிடு உணவ - அது
நிறைவேற்ற செஞ்சிடும் உன்னோட கனவ.
சாராயம் கஞ்சான்னு அடிச்சி - உன்
வாழ்வ நீ தொலைச்சிட்டு நிக்காத முடிச்சி.
நல்ல எண்ணங்கள பதிச்சி - நீ
நலமாக வாழ்ந்திடு உலகத்த மதிச்சி.
மனுசன மனுசனா மதிச்சி - நீ
நடந்திட வேணும் உன் உசுராக நெனச்சி.
எதிர்காலம் செழிக்கவே தம்பி - நீ
கடுமையா உழைக்கனும் உன்கைய நம்பி.
மழபெஞ்சி ஊரெல்லாம் தண்ணி - அத
ஓடவே செய்வோமே வழியெல்லாம் பண்ணி.
இயற்கைய இயற்கையா வணங்கி - நாம
எல்லோரும் இருப்போமே ஒன்றாக இணங்கி.
வீட்டுக்கு மரமொன்று வளர்ப்போம் - அது
நாட்டுக்கு நலமென்று அன்றாடம் நினைப்போம் .
விட்டுக் கொடுத்தே நாம் வாழ்வோம் - இங்கு
இல்லாது போகுமே ஏற்றமும் தாழ்வும்.
வெத்து வார்த்தைகளை கேட்டு - நீ
நடந்தாக்க வைக்குமே உன்வாழ்வில் வேட்டு
உன் வாழ்க்க உன்னோட கையில் - அதை
பங்கிட்டுப் பாக்காத அடுத்தவர் பையில்.
ஒன்றாக வாழ்வோம் நாம்நிதமே - நம்மை
துண்டாக்கி பாக்குது விதியோடு மதமே
மூட பழக்கங்கள் தவிர்த்து - அதை
தூக்கியே போட்டிட்டு உலகத்த நிமிர்த்து .