தளராதே

தோற்றுப் போகாதே!/
தோற்க விடாதே!/
நம்பிக்கையை கைவிடாதே!/
தன்நம்பிக்கையை கை விடாதே!/

முயற்சிகளைப் போடு/
முடிவின்றிப் போடு/
வெற்றிகள் வரும்/
வெகுவிரைவில் வரும்/

தளர்ந்து போகாதே!/
தள்ளிவிடும் கூட்டமுண்டு/
தள்ளிவிட்டுச் செல்/
சூழ்ச்சிகளை புறந்தள்ளி
விட்டுச் செல்/

வெற்றிக் கொடி நட்டிட/
வேக எட்டுக்கள் வைத்து நட/
பொறாமைக் கண்கள்
உன்னை தாக்கும்/
பொறுமை கொண்டு நீ நட/

வெறுமைகள்
உன்னை சூழ்ந்தாலும்/
வறுமைகள் உன்னை தின்றாலும்/
உன் இலக்கின் பாதையை
மாற்றாதிரு... மறவாதிரு/

வீழ்ச்சிகளும்
உன் பக்கம் திரும்பும்/
எழுச்சியாய் நீயும் திரும்பிட/
வீரத்தோடு எதிர்நோக்கி
வீழ்த்தி விடு வீழ்ச்சிகளை.../

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (30-Mar-22, 1:24 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 179

மேலே