உடலும் உயிரும்

அடுக்களைக்குள் கண்ணன் தவழ்ந்து வந்தான்
மூலையில் இருந்த தயிர் சட்டியை அடைந்தான்
அதனுள் கையை விட்டு அள்ளி அள்ளி
காட்டித் தயிரை வாயில் இட்டு விழுங்கி
மீண்டும் சட்டியைத் தாழ்த்த மண்ணில்பட்டு
சட்டி உடைய தயிரெல்லாம் தரையில் வந்து
வழிய அதைப் பார்த்து சிரித்தான் கண்ணன்
' உடைந்த பானை மனிதா உன்னுடல்,
வெளியே வழியும் தயிர்போல் உடலை விட்டு
பிரியும் உயிர்......நீ என்னை நாடினால்
அது என்னை வந்தடையும் பிறவிப் பயனாய் '
என்று கீதையில் உரைத்தவன் குழந்தையாய்
பானைத் தயிரை உண்டு விளக்குகின்றான் ...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Mar-22, 7:59 pm)
Tanglish : udalum uyirum
பார்வை : 96

மேலே