ஐந்தில் தோய்ந்து
1. நாளைய காலைப் பொழுது உற்சாகமாக அமைய , இன்றைய நிறைந்த தூக்கம் மிகவும் அவசியம்.
2. இன்றைய இரவுத் தூக்கம் நன்கு அமைய உடல் உழைப்பு மற்றும் மன வளம் இரண்டும் மிகவும் அவசியம்.
3. உடல் உழைப்பு என்பது உடலுக்கு ஏற்ற உடலால் செய்யும் காரியங்கள் ஆகும். தொழில் சம்பந்தப்பட்ட உழைப்பு இல்லை என்றால் தேகப்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 30-40 நிமிடங்கள் வேக நடை பழகுவதும் உழைப்பே ஆகும்.
4. மன வளம் என்பது இரவு உறங்கச் செல்கையில் மனதை லேசாக இருக்க வைத்தல் ஆகும். பொதுவாக, கோபம், வன்முறை, பொறாமை, எதிர்பார்ப்புகள் இவை குறைவாக இருக்கும் போது மனம் லேசாக இருக்கும் தன்மை அதிகரிக்கும்.
5 . ஒருவருக்கு தைரியம், துணிச்சல், மன உறுதி, நம்பிக்கையுடன் தெய்வீக சிந்தனையும் கலந்து இருப்பின், மேற்கூறிய உடல் உழைப்பும் மன வளமுடன் கண்டிப்பாக சேர்ந்து அமையும். அதனால் சுகமான உறக்கம் கண்டு வாழ்க்கை பதமாக அமையும்.