பெண்ணாசை பொருளாசை உள்ளோர் மக்களெனக் கருதப்படார் – அறநெறிச்சாரம் 92
நேரிசை வெண்பா
(’க்’ ‘ப்’ வல்லின எதுகை)
மக்களும் மக்களல் லாரும் எனஇரண்டு
குப்பைத்தே குண்டுநீர் வையகம் - மக்கள்
அளக்குங் கருவிமற் றொண்பொருள் ஒன்றோ
துளக்குறு* வெள்வளையார் தோள். 92
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
மிகுந்த ஆழம் கொண்ட கடல் சூழ்ந்த உலகம் மனிதரும், மனிதரல்லாதாரும் என்ற இரண்டு குவியல்களை உடையது,
நல்ல மக்கள், அல்லாதார் என்று மக்களை அளந்து காட்டுங் கருவிகள் சிறந்த செல்வமும், விளக்குகின்ற சங்க வளையலை யணிந்த மகளிரது தோளுமாம்.
குறிப்பு:
பிறர்பொருள்களையும், பிறர் மனைவியரையும் விரும்பாதவர்களே மக்களாவர் என்பது கருத்து.