இன்னும் என்ன தயக்கம்

செல்லிடப்பேசியில்
உன் பெயரில்
அழைப்பினைப் பார்த்தால் மட்டும்
என் செல்கள் புல்லரித்து நிற்கின்றன...

நீ அழைக்கும் போது தான்
இயல்பாய் இருக்கும் அழைப்பு மணி
இசையாய் ஒலிக்கிறது
என் காதுகளில்...

உன் குறுஞ்செய்திகளே
என்னை குதுகலமாக இருக்கச் சொல்கின்றன...


நீ உரிமையாக அனுப்பும்
சில தகவல்களினாலே தான்
நான் உயிர் வாழ்வதாகவே உணர்கிறேன்...

எனக்காக நீ துடிக்கும் போது
எனது வலி கூட
வசந்த காலமாக மாறி விடுகிறது...

எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
நாற்காலியிட்டு நாட்களாகி விட்டது
இன்னும் என்ன தயக்கம்
ஒப்புக் கொள்ள மட்டும்


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (9-Apr-22, 7:21 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 184

மேலே