நான் மட்டும் உன்னிடம் கேட்கிறேன் 555

***நான் மட்டும் உன்னிடம் கேட்கிறேன் 555 ***
ப்ரியசகியே...
நீ பயணித்து செல்லும்
ஒவ்வொரு நிமிடமும்...
உன் பயணத்தில்
நான் இருப்பேன்...
என் வாழ்க்கை
பயணத்தில் நீ வந்தால்...
நீ அழகாய் உடுத்தும்
ஆடையில் கூட...
உனக்கு பிடித்த
வண்ணங்களாய் நான் இருப்பேன்...
சிற்பமாக உன்னை
செதுக்க நினைத்தேன்...
என்னையும் நான் செதுக்கி
கொண்டேன் உனக்கு பிடித்ததுபோல...
இடஒதுக்கீடு
இன்னும் வேண்டுமென்று...
அரசிடம் கேட்கும்
பாவைகளில் நீயும் ஒருத்தி...
நான் உன்னிடம்
மட்டும் கேட்கிறேன்...
உன் இதயத்தில்
எனக்கு இடஒதுக்கீடு...
இரவு நேர வானத்தில்
வெண்மையான...
ஒளிவட்டமாய்
நீதான் தெரிகிறாய்...
மாலைநேர செவ்வானத்தில்
வானவில்லாய்...
நீதான்
தோன்றி மறைகிறாய்...
நான் உறங்க சென்றால் எப்படி
என் விழிக்குள் நீ விழித்திருக்கிறாய்...
காலமெல்லாம் நீ இருந்தால்
கஷ்டம் இருக்காது எனக்கு...
மனைவி என்னும்
வார்த்தையை விட...
என்
வாழ்க்கையை அழகாக்க...
தேவதையாக நீ
வந்துவிடு என் வாழ்வில்.....
***முதல்பூ .பெ .மணி.....***