காதல் வலி 89
எரிகின்றேன்
எரிகின்றேன்
என் காதலை
அவள் தூக்கி
எறிந்ததால் நான்
என் உயிர் நீக்கி
எரிகின்றேன்
நான் single
என்று சொல்லியும்
என்னை அங்கில்
என்று சொல்லிவிட்டாள்
அந்த ட்விங்கிள்
நான் வாழ்க்கை கொடுக்க நினைத்தேன் அவள் எனக்கு வழக்கைக்
கொடுத்தாள்
காதல் நோயால் அன்று என் மனம் எரிந்தது காட்டுத்தீயில் இன்று என் பிணம் எரிகின்றது
என் காதலை அவளுக்கு சாதாரணமாய் போனது
அதுவே எனக்கு சதா ரணமாய் ஆனது
கணவனோடு அவள்
கனவுகளோடு நான்
நான் புகையாக மாறினேன் அவள் புன்னகையாக மாறினாள்
நான் சாம்பலாய் மாறினேன் அவள் சாம்பலை தேடினாள்
கண்ணகி மதுரையை எரித்தாள்
இவள் இந்தக் கண்ணனை எரித்த மதுரை
என் இறுதி ஊர்வலத்தில் பூக்களை கொஞ்சம் அதிகமாக தூவி வையுங்கள் அவள் வந்தாலும் வருவாள் அவள் பாதங்கள் நோகாமல் இருக்க
அவள் எதிரே எந்த இளைஞனையும் வர சொல்லாதீர்கள் அவன் என்னோடு வராமல் இருக்க
இறைவன் எப்பொழுதும் என்னை நெருப்பின் மீது நடக்க வைத்தான்
ஆனால் அவன் அறியவில்லை அந்த நெருப்பின் வெப்பத்தை விட என் பாதங்களின் வெப்பம் அதிகம் என்று