வெந்து வெந்து சாகுதடி

கண்களில் கசியும் - அந்த
கள்ளச் சிரிப்பினில் எந்தன்
உள்ளம் சிதறி
சின்னாபின்னம் ஆனதடி....
உன் இதழூறும் எச்சிலைக்கூட
செந்தேனாய் மாற்றிய
விந்தையை எங்கிருந்து கற்றாயடி?
உன் உடல் நனைக்கும்
வியர்வை முழுதும்
குளிர் சந்தனமாய் மணக்கும்
மாற்றங்கள் உன்னில்
எங்கிருந்து வந்ததடி?
மயக்கத்தில் என்னை ஆழ்த்தி...
மோகத்தில் என்னை முக்கி
முத்தமிழில் கவிஎழுத வைத்த
அற்புதங்கள் உன்னால்
நிகழ்ந்த மாயங்கள்தானடி...!
இடைஇடையே உன்
இடை தழுவும் மேகலை
நழுவும்போது எந்தன்
போர் கலை எல்லாம் மறந்து - மனம்
போர்க்களம் ஆனதடி....!
மேலுதட்டின் மேல்முளைத்த
பூனை மீசையினை நான்
தடவும் போது - உன்
கண்கள் சொருகி நீ
ஏகாந்த நிலையில் முனகும்போது
என் ஏகாந்தம் உடைந்து
பரமானந்தக் கடலில்
மூழ்கி மூச்சுத்திணறி
மடிந்தே போகிறேனடி...!
கீழுதட்டை கடித்து உன்
இரு பற்கள் கொஞ்சம் தெரிய
நீ கிறக்கத்தில்
செவ்வரியோடிய பாதிக்கண்கள்
திறந்து என்னை பார்க்கையில்
உன்மத்தம் பிடித்து என்
மனக்குரங்கு தாவித்தாவி
குதிக்குதடி - செந்தணலாய்
வெந்து வெந்து சாகுதடி....!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (16-Apr-22, 8:27 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 8830

மேலே