பூவுலகின் பேரழகி 8

பூவுலகின் பேரழகி..8

அன்பே
நீ அழகான டிவிங்கில்
நானோ சிங்கிள்
ஆவாய் என நினைத்தேன்
என்னோடு மிங்கில்
ஆனால் அழைத்து விட்டாய்
என்னை அங்கில்
என் காதலுக்கு இசையமைத்தாய் சங்கில்

நான் இந்தியாவை நேசிப்பதை விட சந்தியா உன்னை தானடி அதிகம் நேசிக்கிறேன்

நீ நாலடி நடந்தால் அது தான் எனக்கு நாலடியார்
நீ பாடும் பாடல் தான் எனக்கு பரிபாடல்

நீ வைத்திருக்கும் பத்து ரூபாய் தானடி எனக்கு பதிற்றுப்பத்து
நீ கழுத்தில் அணியும் மணிகள் தானடி எனக்கு சீவகசிந்தாமணி

நீ உன் கையில் நான் ஒரு ரூபாயை வைத்து இருந்தால் அதுதான் எனக்காக 400
அதே 400 ரூபாயை நீ உன் கையில் வைத்திருந்தால் அதுதான் எனக்கு புறநானூறு

உன் கை பட்ட தினை தான் நற்றிணை
உன் கூந்தல் தொகை தானடி எனக்கு குறுந்தொகை

உன் குரல் தான் எனக்கு திருக்குறள்
உன் விரல் தான் எனக்கு மாணிக்கப் பரல்

உன்னை விரும்புவோர் அனைவருக்கும் சிறையில்
கலித்தொகை கிடைத்தது
நீ விரும்பும் ஒருவனுக்குத்தானடி கிளித்தொகை கிடைத்தது

நயன்தாரா கூட முகத்தில் சிவப்பு அதிகாரத்தை தான் பேசுகிறாள்
நீயோ சிலப்பதிகாரத்தை பூசுபவள்

நான் தொல்காப்பியனாகப் பிறந்திருந்தால் நிச்சயம் தொல்காப்பியத்தை எழுதி இருக்க மாட்டேன் அன்பே உன்
தோல்காப்பியத்தை தானடி
எழுதி இருப்பேன்


தேவலோகத்தில் பிரம்மன் 25 ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கின்றன
தேவதையைக் காணவில்லை என்று
உன் தாத்தா இறந்து சொர்க்கலோகம் சென்று உன் குடும்ப புகைப்படத்தை காட்டிய பிறகுதான் அவன் அறிந்தான் தேவதை இன்னும் இறக்கவில்லை அவள் பூமியில் உன் உருவில் பிறந்து இருக்கிறாள் என்று .

அறிஞர்கள் சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பார்கள்
அவர்கள் உன்னை கண்டிருந்தால் அந்த வாசகத்தை பொய்யென்று ஏற்றுக் கொண்டிருப்பார்கள்

மதியே
உன்னை கண்ட நாள் முதல் தொலைந்தது என் நிம்மதியே
நீ மதிப்பெண்
உன்னை நினைத்துக் கொண்டே எழுதியதால் குறைந்தது தேர்வில் என் மதிப்பெண்

நீ உன்னை படைத்த பிரம்மனே வியந்து பார்க்கும் புதுப்பெண்
நான் கவிதை எழுத நினைக்கும்
புது பென்


குழல் இனிது யாழ் இனிது என்பார் அன்பே உன் குரல் கேளாதவர்

எல்லோரும்
அமுதத்தை
பாற்கடலில் தேவர்கள் தான் கடைந்தார்கள் என்பார்கள்
நீ கடைந்த கீரை குழம்பை
ருசிக்கும் வரை

கோயிலில் அருள் வேண்டி நீ வரிசையில் நிற்கிறாய்
உன்னருள் வேண்டி உன் பின்னால் என்னோடு ஒரு கூட்டமே நிற்பது அறியாமல்

அன்பே காதல் என்பது கடையில் கிடைக்கும் பொருள் அல்ல அது உன் கடைக்கண்ணில் கிடைக்கும் அருள்

உன்னிடம் அருள் கேட்டு வருவோர்க்கு எல்லாம் கில்லி வழங்கு எனக்கு மட்டும் அள்ளி வழங்கு
உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி வழங்கு

இறைவா
உன்னிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான் ஒன்னு
அவங்க அம்மாவை எனக்கு மாமியாருக்கு
இல்லையா என்ன சாமியாராக்கு

எழுதியவர் : Kumar (19-Apr-22, 6:42 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 382

மேலே