நினைவுகள்

சிட்டுக்கு
தெரியாது
தன்கூடு
நனையுமென்று,
சோம்பலின்றி
அலரப்போகும்
மலர்களும்
அறிந்திராது,,
கத்தரிவெயிலின்
கண்ணாமூச்சி
விளையாட்டை,,
கோடையின்
வெக்கையை
சத்தமிட்டு
வெட்டிவீழ்த்தியது
நேற்றையபொழுதில்
கனமழையொன்று,,
கேட்கவில்லைதான்
யாரும்
அலுப்பும் சலிப்புமாய்
ஆர்ப்பாட்டம்
செய்த மழையை,
யாவையும்
உணர்ந்த
தருணங்களில்
தலையாட்டியப்படி
மிடறுகிறேன்
ஒரு கோப்பையின்
நுனியில்
கோடையிலும்
குளிரும்
உன்
நினைவுகளுடன்
என்னையே!

எழுதியவர் : (19-Apr-22, 7:51 am)
பார்வை : 92

மேலே