வெண்கீரைத் தண்டு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வெண்கீரைத் தண்டு வியாதியற்ற நற்கறியாங்
கண்காணா(து) ஓடிவிடுங் காந்தலெல்லாங் - கண்காணும்
மூலம தற்கேற்கும் மூசி எரிவகற்றுந்
தாலமதில் அக்குணத்தைச் சாற்று

- பதார்த்த குண சிந்தாமணி

வெப்பம், வெளிமூல நோய், பித்த எரிச்சல் இவற்றை இக்கீரைத் தண்டு நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-22, 8:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே