பணம் பணம்

பணம்; பணம்;
பணம் இல்லேனா,
நீ ஒரு செத்த பிணம் பிணம்;
பணம்; பணம்;
பத்தும் செய்யும் இந்த பணம்; பணம்;
பணம் இருந்தா,
பாசமும்,பசையா ஒட்டு வரும்; வரும்;
சொத்தாய் குவிக்கும் இந்த பணம், பணம்;
செத்த பின்னே கூட வராத பணம்; பணம்;
பல பலன்னு சொக்காபோட்டு போகும்,
மைனரின் பாக்கட்டிலும் ஜொலிக்கும், இந்த பணம், பணம்;
பலரையும் பல்ல இளிச்சி காட்ட வைக்கிது,
இந்த பணம் பணம்;
பதுக்கள் காரனின் பங்களாவில் ,
பதுங்கிக்கிடக்கும் பணம், பணம்;
பழிதீர்க்க விலைபோகும் பணம், பணம்;
பாவத்தின் சம்பளமுமே பணம்; பணம்;
நயவஞ்சகனிடம் கூட்டுப் போகும் பணம், பணம்;
பரம பரதேசியிடம் தங்காது இந்த பணம், பணம்;
லஞ்சமாய் புறலும் இந்த பணம்; பணம்;
லட்சியவாதியிடம் அண்டாது, இந்த பணம்; பணம்;
லாட்டரியில் அடிக்கிது, பணம்; பணம்;
லாட்டரி அடிக்க வைப்பதும் பணம்; பணம்;
கஞ்சனிடம் கண்ணீர் விடும் பணம்; பணம்;
கடைக்கு போய் பொருள் வாங்க,
உனக்கு வேண்டும் பணம்; பணம்;
அருள் தேடி போரவனும்,
ஆண்டவனிடம் வேண்டிறான் பணம் பணம்;
அந்த ஆண்டவனுக்கு வேண்டும், இந்த பணம்; பணம்;
அரசியலையே மாற்றும் இந்த பணம் பணம்;
அரிசி கடை காரனும் தேடுறான், பணம்; பணம்;
திருடனுக்கு துணை போகும், பணம்; பணம்;
திரு திருன்னு முழிக்க வைக்கும் இந்த பணம் பணம்;
செலவாளியிடம் சேராத பணம் பணம்;
செல்லாத நோட்டை தொடவைக்காத பணம் பணம்;
ஜென்டில்மேன் என்று சொல்ல வைக்கும் பணம் பணம்;
தாராள மனிதனிடம் தண்ணீராய் கரையும், பணம்; பணம்;
தைரியமாய் கல்லாப்பெட்டியில் உறங்கும், பணம்; பணம்;
கடன்காரனை தேட வைக்கும் பணம்; பணம்;
கணக்கு காட்டவில்லை என்றால் பிடிபடும், பண்ம்; பணம்;
கள்ள நோட்டு அடிப்பவனிடம், கண்ணீர் விடும் பணம், பணம்;
கடத்தல் காரணிடம், கள்ளநோட்டாய் புறலும், இந்த பணம்; பணம்;
கொடுக்கள் வாங்களிலே, கொலைபாதகம் செய்யத்தூண்டும், பணம்; பணம்;
பதுக்கள் காரனின் வீட்டிலே,
தோண்டத் தோண்ட கிடைக்கும் பணம்; பணம்;
நன்கொடையா போகும் பணம்; பணம்;
நடத்தைக் கெட்டவனிடமும், சாவாசம் வைக்கும் பணம், பணம்,
நல்லவனை சோதிக்கும் பணம்; பணம்;
நாலு காசு சேர்ந்து விட்டால்,
திமிரு பிடிக்க வைக்கும் இந்த பணம்; பணம்;
நிம்மதியை விரட்டும் இந்த பணம்; பணம்;
நிற்காம ஓட்டம் காட்டும் பணம்; பணம்;
பணம்; பணம்; பணத்தில் பதுங்கி கிடக்கு சினம்; சினம்;
ஏட்டியம் டப்பாவில வாயப் பொளந்தவுடன்,
எட்டிப் பாக்குது பணம்; பணம்;
ஏமாந்தவனையும் வாய பொளக்க வைக்கும் பண்ம்; பணம்;
ஏழையிடம் அண்டாத பணம்; பணம்;
எடுத்து போறவனை, விரட்டவைக்கும் பணம் பணம்;
உல்லாச வாழ்க்கைக்கு வேண்டும் பணம் பணம்;
உடம்ப எடுத்துபோடவும், வேண்டும் பணம் பணம்;
ஆட்சிக்காரர்களிடம் அடிமையாகுது, பணம்; பணம்;
அடுத்த வீட்டுக்காரனையும் பகைவனாக்கும் பணம் பணம்;
அம்மா அப்பாவையே விலைபேச துடிக்குது பணம் பணம்;
சாட்சிக்காரனிடம், சண்டாலனிடம்,
சதி ஆலோசனை செய்யும்; பணம் பணம்;
சட்டத்தையே விலை பேசுது, பணம் பணம்;
சர்டிவிக்கேட்டையே விலைக்கு வாங்குது, பணம்; பணம்;
பதிவு செய்யுமிடத்தில் பயம்படாமல் சகஜமா புரலுது, பணம்; பணம்;
வேசம் போட வைக்கிது பணம்; பணம்;
வேடிக்கைக் காட்டுவதும் பணம் பணம்;
தோஷம் தோஷம் என்று தோஷத்தை சொல்லியே
பணமாக்குது பணம்; பணம்;
தோச வாங்கப் போனாலும் உனக்கு வேனும் பணம்; பணம்;
தேசத்தையே விலை பேசிது பணம் பணம்;
கட்டு கட்டாய் கட்டிக்காத்தாலும்,
கட்டையில போகும் போது கண்ணக்காட்டாத; பணம்; பணம்;
விலைவாசிய ஏத்திப்புட்டு வீங்காம வீங்கும் இந்த பணம்; பணம்;
வாக்காளர் ஓட்டை தேடி ஓடும் இந்த பணம்;
வாயில்லா பூச்சியே; பணம், பணம்;
ஈட்டிக்காரனிடம் இடம் மாறுது பணம்; பணம்;
வட்டிக்காரனிடம் குட்டிபோடும் இந்த பணம்; பணம்;
பட்டியத்தில் புரலுது பணம் பணம்
படிப்பையே விலைக்கு வாங்குது பணம்; பணம்;
பார்டி கொடுக்க தேவை இந்த பணம்; பணம்;
பாடையில போகும் போதும் படையல் செய்ய வேனும், பணம்; பணம்;
சுய விளம்பரம் தேடுபவனுக்கு உதவுவது பணம் பணம்;
சுகமாய் வாழ உனக்கு தேவை பணம்; பணம்;
சுத்தி சுத்தி வருவது, பணம்; பணம்;
சுகபோக வாழ்க்கைக்கு வேண்டும் பணம் பணம்;
சுத்தமா உன்னை தீர்த்துகட்டுவதும் பணம் பணம்;
பொத்தி பொத்தி வைச்சா புரோஜனப்படாத பணம், பணம்;
காசநோயா உன்னை அரிக்கும் இந்த பணம்; பணம்;
காசோலையாகவும் மாறும் இந்த பணம் பணம்;
கட்டு கட்டாய் கட்டிக்கிடக்குது பணம்; பணம்;
கட்டிலுக்கு அடியிலும் பதுங்கி கிடக்கு பணம்; பணம்;

சூதாட்டத்திலே சுத்தமாக மொட்டை அடிக்கும் பணம் பணம்;
பகைக்கு துணைபோகும் பணம்; பணம்;
படாய் படுத்தும், இந்த பணம்; பணம்;
புழுங்க வைக்கும் பணம்; பணம்;
புழக்கத்தை விட்டு போனா;
செல்லாத காகிதமாகிவிடும், பணம்; பணம்;
செலவழித்த பின்பு கரைந்து போகும் பணம்; பணம்;
பணக்காரம் பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கும் பணம்; பணம்;
பாசாங்கு செய்யிதுபார் பணம், பணம்;
இருப்பவனிடமும், இல்லாதவனிடமும்
தூக்கத்தைக் கெடுக்கும், பணம்; பணம்;
எங்கும் எப்போதும் எவற்கும் வேண்டும் பணம்; பணம்;
ஆலயத்திலும்; ஆஸ்பத்திரியிலும் குவியிது பணம்; பணம்; .
இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுத்துவிட்டால்,
ஏற்றத்தாழ்வையும் குறைக்கும் இந்த, பணம்; பணம்;
சுமத்துவத்தை உருவாக்கும் பணம் பணம்;
சங்கடத்தைம் உருவாக்கும் பணம்; பணம்;
சல்லி காசு இல்லேனா உன்னை செல்லாத காசாக்குவதும் பணம்; பணம்;
பணம் பணம், மனிதன் உயிர் வாழ அவசியம் வேண்டும்,பணம் பணம்,
உயிர் வாழபிராணவாய்வும்; பணவாய்வும் ஆகும் பணம் பணம்,
அதிகாலை வணக்கத்தைக் கூறும் அன்பன்
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (2-May-22, 10:29 am)
பார்வை : 1092

மேலே