POOVITHAZH THEN SINTHUTHE

புன்னகையில் முல்லை
____மலர்ந்து சிரித்திட
பூவிதழ் தேன்சிந்து தே !

கண்ண சைவில்
____கயல்கள் நீந்திட
காதலோ என்நெஞ் சில் !

சங்குக் கழுத்தினில்
___அந்தி நிலவுபோல்
திங்கள் முகத்தவ ளே !

விந்தை புரிந்திடும்
___தாமரை மொட்டுக்கள்
அந்திப் பொழுதின் அழகு !

குறளாய்ச் சிறுத்த
___இடையுடன் கோபுரம்
போல்குனிந்து நடக்கி றாய் !

பாதரோஜா வில்கொஞ்சும்
___வெள்ளிக் கொலுசு
மெதுவாய் நடநோ கும் !

எழுதியவர் : Kavin charalan (2-May-22, 5:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே