வேழப்பசி நிகரான

உயிர் காக்கும் மருந்துக்கும் வரி
உயிர் குடிக்கும் மதுவுக்கும் வரி
உயிர் வளர்க்கும் உணவுக்கும் வரி
பயிர் வளர்க்கும் மருந்துக்கும் வரி

மானம் காக்கும் துணிக்கும் வரி
கானம் விலையும் பழத்துக்கும் வரி
தேனெனும் இயற்கைக்கும் புதிய வரி
பானங்கள் பலவற் றுக்கும் வரி

விளக்கு எரிக்கும் மின்னுக்கு வரி
விளக்கு மாறு வாங்கிலும் வரி
தளம் போடும் கல்லுக்கும் வரி
களம் காயும் எள்ளுக்கும் வரி

ஆலை செல்லும் கரும்புக்கும் வரி
சாலை செல்லும் வாகன வரி
பாலை நில பழத்துக்கும் வரி
நூலைத் தரும் பட்டுக்கும் வரி

வாழும் நாட்டில் இவ்வகை வரிகளை
ஆழமாய் விதிக்கும் ஆளுங் கட்சிகள்
ஏழை மக்களை தினமும் வதைக்கும்
வேழப்பசி நிகரான வரியை மாற்றுமோ
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-May-22, 4:30 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 24

மேலே