இனிது இனிது காதல் இனிது 555
![](https://eluthu.com/images/loading.gif)
***இனிது இனிது காதல் இனிது 555 ***
காதலே...
காதல் உணர்வுகள் வயதுக்கு
சம்பந்தப்பட்டது இல்லை...
மனசுக்கும் வாழ்க்கைக்கும்
சம்பந்தப்பட்டது...
பருவ வயதில் அரும்பு மீசை
வளர்வது போல வளரும் காதல்...
இளமை
துள்ளலில் மட்டுமே...
நரை எழுதும் சுயசரிதை
வரை வளரும் காதல்...
வாழ்க்கையின் இறுதி
துடிப்பு வரை தொடரும்...
ஆயிரமாயிரம் இதயங்கள் தினம் தினம்
பரிமாறி கொண்டாலும்...
இளமை முதல் முதுமைவரை தொடர்வது
எத்தனை காதல் உண்டு இன்று...
மழைக்காலத்தில்
வரும் கார்மேகமும்...
மாலை நேரத்தில் வரும்
செவ்வானமும் ஒன்றாகுமா...
கார்மேகம்
இளமை துள்ளல் போல...
செவ்வானம் இளமை முதல்
முதுமைவரை தொடரும்...
தோற்று
போகும் நிலையிலும்...
தோல் கொடுத்து தங்கி
நிற்கும் புரிதலின் காதல்...
நம் முயற்சிக்கெல்லாம்
முதல் அடியாய் இருப்பதும்...
புரிதலின்
இனிமையான காதல்தான்...
நிலையான
காதல் வானம் பூமிபோல...
ஆழமான காதல்
என்றும் அழிவதில்லை.....
***முதல்பூ.பெ.மணி.....***