கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 555

***கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 555 ***


என்னழகே...


உன் கண்கள் நிறைய
காதலை வைத்துக்கொண்டு...

என்னிடம் இல்லை என்று எப்படி
உன்னால் சொல்ல முடிகிறது...

வாடைக்காற்று
வீசும் வேலை...

நம் கைகள்
இரண்டும் ஒன்றாகி...

உன்னை அள்ளி அனைத்து
விழிகள் சம்மதம் சொல்ல...

உன் நெற்றியில் முத்தம்
பதிக்க வேண்டும்...

நெடுந்தூர பயணம் உனக்கு
புடிக்கும் என்கிறாய்...

உன்
கரம் கோர்த்து செல்ல
எனக்கும் ஆசைதான்...

உன்னோடு
சேர்ந்திருக்கும் நொடியிலே...

நான் மடிந்தாலும்
சந்தோசம்தான் எனக்கு...

கடற்கரையில் பதியும்
பாதச்சுவடுகள் எல்லாம்...

சில நிமிடங்களில்
அலைகள் அடித்து செல்லும்...

என் இதயத்தில் பதிந்த
உன் சுவடுகள் மட்
டும் அழிவதில்லை...

நீ காதல் சொல்லும் அந்த நாளுக்காக
காத்திருக்கிறேன் கண்மணியே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (14-May-22, 8:59 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 299

மேலே