காதல் ராசாவே
எந்தன் உயிர் காதல் ரோசாவே...
உந்தன் கையில் நான் ராசாவே...
எந்தன் உயிர் காதல் ராசாவே...
உந்தன் கையில் நான் ரோசாவே...
விழியினில் நுழைந்தே - என்
இதயம் நிறைந்தாய்.
விழிதன்னை மூடியே - உன்னை
சிறை வைத்தேன்.
வேண்டுகின்ற போதே
விடுவித்தே
வரம் கேட்பேன்.
எந்தன் உயிர் காதல் ராசாவே...
உந்தன் கையில் நான் ரோசாவே...
நாட்டியம் ஆடிடும் உந்தன்
சிறு இடையே..
என்னிதயம் மயங்கிடும் அதன்
மென் அசைவே..
தென்றலாய் வீசும்
தென்னங்கீற்றும்
தாலாட்டுமே.
எந்தன் உயிர் காதல் ரோசாவே...
உந்தன் கையில் நான் ராசாவே...
மழையினில் ஆடியே - உன்னுடன்
நனைந்தேன்.
மலையினில் ஓடியே - என்னைநான்
மறந்தேன்.
கனவினில் தானே
காண்கின்றேன்...
காதல் கொண்டேன்.
எந்தன் உயிர் காதல் ராசாவே...
உந்தன் கையில் நான் ரோசாவே...