சாதி நாரத்தை – கொளுஞ்சி நாரத்தை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சாதிநரந் தம்பழந்தான் தாகந் தனையகற்றும்
ஓதருசி வாய்க்கசப்பை ஓட்டுங்காண் - வேதால்
அளிஞ்சமே கத்தேகர்க் காம்வறட்சி போக்கும்
கொளுஞ்சிநரந் தம்பழந்தான் கூறு
- பதார்த்த குண சிந்தாமணி
சாதி நாரத்தம்பழம், தாகம், அரோசகம், வாய்க்கசப்பு இவற்றை நீக்கும்; கொளுஞ்சி நாரத்தம்பழம் நாவறட்சி போக்கும்