நாய்ப் பாகல் - நேரிசை வெண்பா
நாய்ப் பாகல்
நேரிசை வெண்பா
நாய்ப்பாக லின்குணத்தை நன்றாய் உரைக்கக்கேள்
வாய்ப்பான பீநசத்தை மாற்றுங்காண் - மாய்ப்பாக
லிங்கமதைச் சுத்திசெய்யும் நேரிற்பா ஷாணத்தைப்
பங்கமறச் சுத்திசெய்யும் பார்
- பதார்த்த குண சிந்தாமணி
இது பீநசத்தை நீக்கும்; சாதிலிங்கம், பாசாணம் இரண்டையும் சுத்தி செய்யும்