சீரொழுங் கில்லாப் பாடல் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

சீரொழுங் கில்லாப் பாடல்
..சிறப்பது மில்லை சொல்வேன்;
பாரினில் பண்பில் லாதார்
..பாந்தமாய் வாழ்வ தில்லை!
தேரிலாச் சகடம் போலே
..தெருவினில் போவோர் உண்டோ?
காரணஞ் சொல்வாய் கண்ணே
..களிப்புடன் வாழ லாமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-May-22, 2:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே