புதுக்கவிதை அன்றுமின்றும்
ஆசிரியப்பா
எத்தனை எத்தனைப் புதுக்கவிதை பார்த்தேன்
அத்தனை மிளிர்தல் வந்தப் புதிதில்
யாப்பு இல்லா விடினும் யதார்த்தம்
கண்டோம் உண்மை கண்டோம்
போட்ட சாணியை விரட்டி தட்டி
சோடா புட்டி போன்ற சொல்லுடை
அடுக்கு கண்டு மகிழ்ந்தோம் இன்று
ஏனோ உரைநடை மொழியில்
என்னமோ கிறுக்கி புதுக்கவிதை என்றானே
..,