இரு இதயமும் இணைந்து துடிக்கும் மாயம்

ஒன்றாய் நடந்து செல்லும் தருணம்
இருவர் மனதிலும் ஆயிரம் ஆசைகள்
சில வேறுபாடுகள் பல மாறுபாடுகள்
ஆயிரம் மோதல் இருந்தாலும் மனதில் ஆழ்ந்த காதல்
கடல் போல ஆழம் மலை போல் உயரம் வான் போல தூரம்
நாழிகை கழிவது மிக நளினம்
உணர்வின் அலைநீளம் ஒன்றுபட்டு களி நடனம்புரிய தூய அன்பின் வெளிப்பாடு தானோ இது
இரு இதயமும் இணைந்து துடிக்கும் மாயம்

எழுதியவர் : Kaleeswaran (31-May-22, 10:35 pm)
சேர்த்தது : KALEESWARAN
பார்வை : 135

மேலே