புனிதமான பெண்
மாசு ஏதும் இல்லாது பொய்கையின்
சேற்றிலிருந்து தலைதூக்கி நிமிர்ந்த தாமரை
அதன் இலைகளிலும் நீர்திவலைக்கூட
ஒரு கணமும் நிற்காது அக்கணமே நீங்கிவிடும்
புனிதவாதியாம் பெண் தாமரைப்பூ போல
எங்கிருந்து வந்தாலும் மாசிலாதவள்