உன் சுவாச காற்று தொடும் தூரத்தில் நான் 555

***உன் சுவாச காற்று தொடும் தூரத்தில் நான் 555 ***
உயிரானவளே...
உன்னை சந்திக்கும் முன்னும்
உன்னை சந்தித்த பின்பும்...
எது நடந்தாலும் உன்னிடம்
சொல்லியே பழகிவிட்டேன்...
ஏனோ நான் சொல்லிய
சில நிகழ்வுகளை...
சொல்லி காட்டியே
பிரிந்துவிட்டாய் என்னை...
என் இதயம் இன்று
உணர்வற்று கிடக்கிறது...
நொடிக்கு நொடி உன்
நினைவுகள் உரசி செல்கிறது...
முடிந்து போனது என்று நீ
சொன்ன வார்த்தைதான்...
என் வாழ்க்கையை
ரணமாக கொள்கிறது...
உள்ளுக்குள் அழும் இதயத்தின்
மௌன மொழிதான்...
என்
முகத்தில் சோகம்...
நீயும் நானும்
இனி சேரப்போவதில்லை...
உன் நினைவுகளோ
நெஞ்சைவிட்டு நீங்குவதில்லை...
எளிதாக நீ என்னை
நிராகரித்துவிட்டாய்...
என்னால்தான் எள்ளளவும்கூட
உன்னை நிராகரிக்க முடியவில்லை...
முடிந்தால் ஒன்று மட்டும்
எனக்காக செய்...
நான்
இறக்கும் நேரத்தில்...
உன் சுவாச காற்று என்னை
தொடும் தூரத்தில் நீ இருப்பாயா...
என் ப்ரியமானவளே.....
***முதல்பூ.பெ.மணி.....***