ஊமத்தங்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாதமறும் பித்த மயக்கமுறும் மாநிலத்தில்
தீது கரப்பான் சிரங்ககலுங் - கோதாய்கேள்
மாமத்த மாகும் வறட்சியெல் லாம்போகும்
ஊமத்தங் காய்க்கென்(று) உரை

- பதார்த்த குண சிந்தாமணி

இக்காயினால் வாதம், கரப்பான், சொறி, கிரந்தி, வறட்சி இவை நீங்கி பித்தமயக்கமும் உள்மாந்த நோயும் உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-22, 6:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே