அப்பா நாயகன்

நான் மகனாக இருந்தபோது
அப்பா சொன்னாவை
தப்பாகத்தான் தெரிந்தது.
நான் அப்பாவான பின்பு
அப்பா சொன்னாவை
தத்துவமென புரிகிறது.

கதைகளில் வில்லன்
நாயகனாக மாறுவதுண்டு.
இந்நாள்வரை அப்பா நாயகனை
வில்லனாக கருதிவிட்டேனே!

கல்லுக்குள் ஈரம் தெரிவதில்லை.
கோபத்துக்குள் பாசம் புரியவில்லை.
அவர் நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்தியது
நான் முளைத்து வளரத்தான்
என உணரவில்லையே!

கண்காணாக் கடவுள்
தந்த இந்த கடவுளை
வணங்க மறந்தேனே!

எழுதியவர் : (18-Jun-22, 3:46 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 38

மேலே