ஈசனே போற்றி பாகம் 14

ஆழி சொட்டும் கும்பம் தொங்க,
ஈரம் பட்ட மேனி ஜொலிக்க,
நீரைச் சேர்த்து சொட்டும் ஆவுடை,
பக்தன் பருகும் தீர்த்தம் ஆகும்.

செதுக்கும் சிற்பி சிந்தை கலந்தும்,
அனைவருக்கும் அருளும் பொழுது,
சிற்பி குலத்தை காட்டா தெய்வம்,
சிவத்தின் குணத்தை காட்டுமே.

பூஜை பொருளின் மதிப்பை காணா,
வந்த பக்தன் மனதை காணும்,
இயல்பைக் கொண்ட எந்தன் ஈசன்.
ஞானம் வழங்கும் எங்கள் நாதன்.

மலர்கள், தழைகள் மணிக்கல் இதிலோ,
பேதம் பார்க்கா சமமாய் அருளும்,
நெரி முறை அறியா பிள்ளை எமக்கு,
பிறவி இல்லா வரத்தை அருள்வாய்.

எழுதியவர் : (19-Jun-22, 7:30 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 27

மேலே