கடவுள் என் காதலன்
கடவுள் என் காதலன்..
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
பூக்களுக்குள் பொதிந்தாலே
புரியாதோ ,
பொங்கிவரும் சங்கீதம்
வழியாதோ!
ஈக்களுக்குத் தேன்மணம்தான்
தெரியாதோ,
இன்னுயிரே இன்னுமெனை
அறியாயோ !
காதமெலாம் தூரமிலைக்
காணுகிறேன் ,
கண்களுக்குள் மணியானாய்ப்
பேணுகிறேன் !
நாதமெலாம் நின்குரலே
மயங்குகிறேன்,
நல்லிடையன் நின்கோலுள்
அடங்குகிறேன் !!
-யாதுமறியான்.