தலைவர் தேர்தல்

திருடர்கள் கூட்டமைப்பின் தலைவர் தேர்தல். பழம்பெரும் திருடர் பட்டாக்கத்தி பரமராஜன் தேர்தல் அதிகாரி:
அன்பு நெஞ்சங்களே. நம்மை நாமே திருடர்கள் என்று அழைத்துச் சிறுமைப் படுத்தக் கூடாது. நமது பாதை வாழ்க்கைப் பாதை.
உங்களை தொண்டர்களே, தோழர்களே,
கண்மணிகளே என்று அழைப்பது தான் சிறப்பு. நமது அமைப்பில் ஐயாயிரம் பேர் உள்ளனர். அதில் பெண் தொண்டர்கள் இரண்டாயிரம் பேர். மகிழ்ச்சியான செய்தி.

நமது கூட்டமைப்பின் தலைவர் தேர்தல் முடிவை அறிவிக்கவே இங்கு கூடியுள்ளோம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்தது.

நமது கூட்டமைப்பின் விதிகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகப்படியான குற்றச் செயல்களில் கொண்டே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். தகுந்த நாளிதழ்கள் ஆதாரம் தேர்தல் விண்ணப்பத்துடன் சமர்ப்பிப்பது நமது பாரம்பரியம்.

இந்த விதியின்படி பிரியாணி பலராமனே நமது கூட்டமைப்பின் தலைவர் ஆகிறார். துணைத் தலைவராகும் செல்வி இரட்டைச் சடை ஸ்வேதா அதிகப்படியான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்.

விண்ணைத் பிறக்கும்படி அனைவரும் கைதட்டி இருவரையும் வாழ்த்துங்கள். பிற நிர்வாகிகள் பற்றி‌ நாளை அறிவிக்கப்படும்.

தலைவர் பிரியாணி பலராமன்: " வாழ்க, வாழ்க"

துணைத் தலைவர் தங்கை இரட்டைச் சடை ஸ்வேதா: "வாழ்க, வாழ்க!".
@@@@############@@@@@@@@@@@

இது போன்ற கூட்டமைப்பு சட்ட விரோதமானது.

எழுதியவர் : மலர் (21-Jun-22, 10:30 am)
சேர்த்தது : மலர்1991
Tanglish : thalaivar therthal
பார்வை : 76

மேலே