அம்மாவின் அன்பு
உரிமையோடும் சில நேரம் கோபத்தோடு பேசினாலும் உன் அன்பு அக்சய பாத்திரம் தானம்மா
வெற்றியோ தோல்வியோ தாயே உன் மடியில் தலை சாய்த்தால் போதும் மனம் முழுதும் தைரியம் பிறக்கும்
அம்மா, ஆயிரம் பேர் வந்தாலும் உன்னுடைய அன்பை தருவது சாத்தியமில்லை.
என்னை சுமந்து ,என்னை வளர்த்து ஆளாக்கிய அன்னைக்கு ஏதும் இணையில்லை
சாப்பிட்டாயா என்று உன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் போதும் உன் அக்கறை உணர
என்ன எழுதினாலும் உன் அன்பை உணர்ந்தவர்களுக்கு அதன் பெரு மதிப்பு புரியும்