அருகாமையில் வேண்டும்
உன்னோடு உணவகம் வந்தேன்
எதிரில் அமரச் சென்றாய்
எதற்கு என்றேன்
பேசிக் கொண்டே சாப்பிட
வசதியாக இருக்கும் என்றாய்..
என் பக்கத்து இருக்கை
உனக்காக
காலியாக இருக்கும் போது
நீ
ஏன் எதிரில்அமர வேண்டும்?
நீயும் உன் நட்பும்
என்றும்
எனக்கு அருகாமையில்
வேண்டும்
அன்புடன் ஆர்கே..