பொழியும் முகிலுமே பூந்தளிர்க் கூந்தலில் பூப்பு - கலித்துறை
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(1, 3, 5 சீர்களில் மோனை)
விழியில் கனவினை வேட்கையாய்த் தீண்டிடும் விருப்பு;
பொழியும் முகிலுமே பூந்தளிர்க் கூந்தலில் பூப்பு!
மொழியும் வகைத்ததாய் முந்துறும் தேனிதழ் முன்பு;
செழித்த கவிநயம் செய்குவேன் அன்பினில் சிறந்து!
– வ.க.கன்னியப்பன்