அழிவிலாக் கவிநயம் அன்பினில் செய்குவேன் - கலித்துறை

கலித்துறை
(கருவிளம் கருவிளம் கூவிளம் கூவிளம் மா)
(1, 3, 5 சீர்களில் மோனை)

விழிகளில் கனவினை வேட்கையாய்த் தீட்டிடும் விருப்பு;
பொழிந்திடும் முகிலுமே பூந்தளிர்க் கூந்தலில் பூப்பு!
மொழியிலா வகைத்ததாய் முந்துறும் தேனிதழ் முன்பு;
அழிவிலாக் கவிநயம் அன்பினில் செய்குவேன் அன்பு!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-22, 1:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே