செழித்த கவிநயம் செப்புவேன் அன்பில் சிறந்திடவே - கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை

விழியில் கனவினை வேட்கையாய்த் தீண்டும் விருப்பினையும்
பொழியும் முகிலதும் பூந்தளிர்க் கூந்தலில் பூப்பதுவும்
மொழியும் வகைத்ததாய் முந்துறும் தேனிதழ் முன்சொலவும்
செழித்த கவிநயம் செப்புவேன் அன்பில் சிறந்திடவே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-22, 5:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே